Why ADS

Hi Guys, This App Won’t support – won’t function properly, if you have installed ad blocker in your mobile, Unfortunatly We are sorry to say this, We are unable to bring this service for free without ads,  – In order to cover our operational cost – we need to relay on ads,  if you have ad blocker in place, kindly remove / uninstall your ad blocker and keep supporting us,

Thank you

Important Notice;  🎧🎧🎧🎧 🔥🔥🔥🔥

Southradios and HD Tab Radios stations Belongs to Southradios.com, We listed more than 300 radios in our app, which does not belong to us,

some times any 3rd party radios can be offline, due to server failure or Electricity down or internet down  “When you see server down – Report to southradios” message ( we can only address this issue to particular radio provider)

Kindly please follow this prompts to ensure you won’t miss your favorite radios, after the update before play any radios, please clear the list of your favorite radio & do not access any radios from your recently played tab till your old last played history get cleared, please start from our new fresh list & store any radios as you want them to appear under your favorite list – we understand it’s an inconvenience, we apologize)

What’s New In Southradios Mobile Application :

*Added
( Most Requested UI)
*Includes better optimization –
Fast open app Ever,  with less than 2 Seconds
*Streaming delay and loading issue fixed
*Added Light & Dark theme options ( Go to menu & Change)
* Grouped most popular Radios
* User-Friendly UI with the grid view option
*Implemented podcast Tab (more episode coming soon)
* Full Page Player
* Removed push notification & In-App message
*Separate Tab for Air Tamil, World Tamil FM’S

பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்கும் உரிய நம் அன்பு நேயர்களிற்கு வணக்கமும், நல் வாழ்த்துகளும்,
தாங்கள் அனைவரும் இந்த Covid19 காலப் பகுதியில் பாதுகாப்பாக இருந்திட நம் அனைவருக்கும் பொதுவான இறைவனை பிரார்த்திக்கின்றோம்,

நம் சேவையில் விளம்பரங்கள் எதற்காக,

Southradios 60 இற்கும் மேற்பட்ட இணைய வானொலிகளை Soutradios.com மற்றும் நமது Android IOS செயலிகள் ஊடாக உங்களிற்காக வழங்கி வருகின்றது,
நம் சேவையில் உள்ள 8D  & 3D வானொலிகள் அனைத்தும் எப்படி சூரியன் பண்பலை, ரேடியோ Mirchi ஒலிக்கின்றதோ அதே போன்ற தொழில்நுட்பத்தில் Studio Console ஊடாக உங்களை வந்தடைகின்றது, ஆனால் பண்பலை வானொலிகள் Transmission பயன்படுத்துவார்கள், நாம் இங்கே இணைய வழி Encoders பயன்படுத்துகின்றோம், இதற்கு மின்சாரக் கட்டணம், கலையக வாடகை ( Studio Rent), Internet Bill , 33% Government tax , பணி செய்யும் ஊழியர்களின் மாதாந்த ஊதியம், செயலிகளை மேம்பாடு செய்யும் வடிவமைப்பாளர்களிற்கான உதவித் தொகை, இங்கே ஒலிபரப்படும் உள்ளீடுகளுக்கான காப்புரிமை கட்டணம், நீங்கள் ஒவ்வொருவரும் கேட்கும் போது நாமும் பயனர்களிற்காக Streaming Bandwidths கட்டணம் செலுத்த வேண்டும், இப்படி ஏராளமான விடயங்களை தாண்டியே இந்த வானொலிகள், தூக்கமற்ற நம் பணியாளர்களின் அயராத முயற்சியினால் உங்களை வந்தடைகின்றது. அத்துடன், செயலி  வடிவமைப்பாளர் ஊதியம், பாடல்களை தெரிவு செய்யும் பணியாளர்களிற்கான ஊதியம், ஒலிபரப்பு ஒலித் தெளிவு மேம்பாட்டாளர்களிற்கான ஊதியம், உங்களது Review And Rating மற்றும் Customers Support பகுதியில் பணிபுரிவோருக்கான ஊதியம், எனப் பல்வேறு செலவீனங்களைத் தாண்டியே நம் சேவை உங்களை வந்தடைகின்றது.   இந்த செலவீனங்கள் யாவற்றையும் இந்த சிறு விளம்பரங்கள் ஊடாக மட்டுமே நம்மால் நிவர்த்தி செய்ய முடிகின்றது.

இந்த விளம்பரங்கள் இங்கே இருப்பதால் நமக்கு பணம் கிடைக்குமா என்றால்? கிடையவே கிடையாதுங்க, நாளாந்தம் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் இச் சேவையிற்கு வருகை தந்தாலும் க்ளிக் செய்வோர் வெறும் ஆயிரம் / இரண்டாயிரம் பேர் மாத்திரமே, இதன் மூலம் ஒவ்வோர் க்ளிக் அடிப்படையிலும் 1-2 பைசாக்களே நமக்கு வருமானமாக வருகின்றது, இதைப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றோம். இவ் விளம்பரங்களை க்ளிக் செய்தால் மாத்திரமே நமக்கு சிறியளவிலான வருமானம் கிடைக்கும், அதனால் தான் 4 தடவை க்ளிக் செய்த பின் முழுப் பக்க விளம்பரங்கள் வரும் வகையில்  வடிவமைத்துள்ளோம், இசைப் பிரியர்களிற்கு இது இடையூறாக அமையும் என்பதை அறிவோம் நாம், அதற்காக நம் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்,

நம் சேவை பிடித்திருந்தால், செயலியின் இடது பக்க மூலையில் க்ளிக் செய்து Share App பகுதியினூடாக உங்கள் நண்பர்களிற்கும் அறிமுகம் செய்யுங்கள், குறையிருந்தால் அறியத் தாருங்கள், அடுத்து வரவுள்ள பதிப்பில் நிவர்த்தி செய்ய காத்திருக்கின்றோம்.  தங்களின் ஆக்கபூர்வமான விமர்சனங்களும், எண்ணக் கருத்துக்களும் மாத்திரமே நமது இச் சேவையினை வளம்படுத்தும். உங்கள் சாய்ஸ் – எங்கள் வாய்ஸ்!!

இந்த செயலியானது On Demand – in App built Playlist உதவியில் ஒலிக்கின்றது என்ற தவறான எண்ணம் உங்களில் யாருக்காவது இருந்தால் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள், இச் சேவையானது Gaana, Jio Music, Spotify போன்று Saved – Stored Playlist உதவியில் On demand Content ஆக ஒலிக்கும் சேவை கிடையாது, இச் சேவையானது Streaming servers உதவியுடன் இடம்பெறுகின்றது
நம் சேவை தொடர்பான விளக்கத்தினை தங்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இங்கே இரு வீடியோக்களை இணைத்துள்ளோம்,
Video 1 இனைப் பார்வையிட இங்கே க்ளிக் செய்யுங்கள்
Video 2 இனைப் பார்வையிட இங்கே க்ளிக் செய்யுங்கள்

Play Store மற்றும் App store இல் கிடைக்கிறதே இச் செயலி, இலவசமாக கேட்க விடுங்கள் என்று பலரும் நாளாந்தம் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றீர்கள், நம்மில் சில பேர் இன்னும் ஒரு படி மேல் சென்று தகாத வார்த்தைப் பிரயோகங்களை உள்ளடக்கி, அநாகரிகமாக மின்னஞ்சல் அனுப்பி விளம்பரங்களை நீக்குங்கள் என்று கேட்கிறீர்கள், Sorry If we are wrong & rude இதற்கு ஒரேயொரு வழி உங்களோட மொபைலில் பாடல்களை தரவிறக்கி கேட்பது அல்லது மாதாந்தம் 5.99 அமெரிக்க வெள்ளிகள் – உள்ளூர் மதிப்பில் 350-400 ரூபாக்கள் செலவு செய்து கட்டண சேவை வழங்கும் Premium Content Providers மூலம் பாடல் கேட்பதே,  இனி வரும் நாட்களில் இப்படி அநாகரிகமாக நடந்து கொள்ளும் பயனர்களை நம் சேவையினை கேட்காத வகையில் தடை செய்கின்ற பரிபூரண உரிமை நமக்கு உண்டு,

இச் சேவையில் வரும் டிஜிட்டல் விளம்பரங்கள் தொடர்பாக தங்களிற்கு ஏதேனும் புகார் இருந்தால். சட்ட ரீதியாக நீதிமன்றிலோ அல்லது அரச ஒலிபரப்பு திணைக்களத்திற்கோ அறிவிக்க விரும்பின் தொடர்பு கொள்ளுங்கள் Consent Form வழங்க தயாராக உள்ளோம், / Google இல் Local Government Broadcasting Consent form எனத் தேடி தங்கள் முறைப்பாட்டை சமர்ப்பியுங்கள்.

இங்கே வருகின்ற டிஜிட்டல் Display விளம்பரங்கள் யாவும் தங்களது தனிப்பட்ட தொலைபேசியின் தேடுதல் அடிப்படையிலே வருகின்றது.
சிரமமின்றி தங்கள் தொலைபேசி Browser இல் Incognito Browser இனை பயன்படுத்துங்கள், அநாவசியமான வயதுக்கு மீறிய விளம்பரங்களை இது தடை செய்யும்.

தாங்கள் Rate And Review பகுதியில் பகிர்கின்ற பிரச்சனைகள் தீர்க்கப்பட்டால், தயவு கூர்ந்து தங்களின் Rating And Reviews இனை மீளத் திருத்தி எழுதுங்கள்,
நாம் உங்களிட ம் கேட்பது ஒன்றே ஒன்று மட்டுமே, உங்களின் பேரன்பும் பேராதரவும் , ஆம் இச் சேவை இலவசமாக தொடர்ந்திட அதிகளவான 5* மதிப்பெண் அவசியமாகின்றது, More Review And More 5***** Rating = More Quality Radios ,  Please Rate And Review Us

தொடர்ச்சியாக நமது சேவைக்கு நீங்கள் அனைவரும் வழங்கி வரும் நல்லாதரவிற்கு நம் உளமார்ந்த நன்றி.
*உங்கள் பேரபிமானத்திற்குரிய  Southradios வானொலி கட்டமைப்பின் Android & IOS செயலியின் புதிய பதிப்பின் ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் அகம் நிறைகின்றோம்.
இந்தப் புதிய பதிப்பில் 200 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களிற்காக.
இச் செயலியில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், Bollywood எனப் பல்வேறு மொழி வானொலிகள் இணைக்கப்பட்டிருக்கின்றது.
நம் சேவை தொடர்பான உங்களின் பல்வேறு சந்தேகங்களிற்கு இந்தப் பகுதியில் நம் பதில்களை இணைத்துள்ளோம்.

விளம்பரங்கள் ஏன் இந்தச் செயலியில் உள்ளது? இந்தச் செயலியில் உள்ள எந்த ஓர் வானொலியும் In App Built ஆகவோ / In App Built Playlist ஊடாகவோ ஒலிபரப்படவில்லை. நமது இந்தச் செயலியில் உள்ள Southradios நிறுவனத்திற்குச் சொந்தமான 60+ வானொலிகளும் Online Radio Broadcasting தொழில்நுட்பத்தின் ஊடாக, Cloud Servers மற்றும் Studio Console வழியே உங்களை நாடி வருகின்றது. இந்த வானொலிகள் அனைத்தும் தொழிற்படுவதற்குரிய Server கட்டணம், ஒவ்வோர் நேயர்களும் நம் சேவையினை கேட்கும் போது Server இற்கு செலவாகும் Bandwidth அடிப்படையில் அதற்கான  கட்டணம்் ஆகியவற்றை நாமே செலுத்த வேண்டும். அத்துடன் நாளாந்தம் எத்தனை மணி நேரம் நேயர்கள் இந்தச் சேவையினை செவிமடுக்கிறார்களோ, அதற்குரிய Total listening Hours கட்டணமும் நாமே செலுத்த வேண்டும். அத்துடன் அரசாங்க வரி.

நம் செயலி மற்றும் இணையத்தளம் தொடர்பான தவறுகள் வருகின்ற போது,  அவற்றினைச் சரிபார்க்கும் தொழில்நுட்ப வல்லுனர்களிற்குரிய ஊதியச் செலவீனம். இது மணித்தியால அடிப்படையில் அமெரிக்க வெள்ளிகளில் வழங்க வேண்டும் . நம் ஊழியர்களுக்கான ஊதியம், மின்சார கட்டணம், Internet கட்டணம் இப்படி ஏராளமான செலவீனங்களிற்கு மத்தியில், மாதாந்தம் 5000 வெள்ளிகளுக்கு மேல் இந்தச் சேவைக்காக செலவு செய்கின்றோம். இங்குள்ள டிஜிட்டல் விளம்பரங்களை நீங்கள் க்ளிக் செய்தால் மட்டுமே நமக்கு சிறியளவு வருமானம் கிடைக்கும். அந்த வருமானத்துடன், நம் சொந்தப் பணத்தையும் செலவு செய்தே இச் சேவை தங்கள் அனைவரையும் நேர்த்தியான முறையில் வந்து சேர வேண்டும் எனும் நோக்கில் மாதாந்தம் பல புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தி, தொடர்ந்தும் சிறப்பாக உங்களிற்காக இந்தச் சேவையினை தொடர முயற்சிக்கின்றோம்.  இந்த டிஜிட்டல் விளம்பரங்கள் ஏதுமின்றி, நம்மால் சேவையினை இலவசமாக வழங்க முடியாது.

ஒரு தடவை பணம் செலுத்தி, AD unlocked செய்ய முடியுமா? AD Free Version கிடைக்குமா? இப்படி நம் நேயர்கள் பலர் கேட்டிருந்தார்கள், மன்னிக்கவும், ஒரே ஒரு தடவை பணம் செலுத்தி தொடர்ச்சியாக இலவசமாக இச் செயலியினை பயன்படுத்தும் வாய்ப்பினையும் நம்மால் வழங்க இயலாதுள்ளது. காரணம் நீங்கள் ஒரே ஒரு தடவை தரும் சிறிய தொகை, நமது மாதாந்த இந்தச் செலவீனங்களிற்கு போதுமானதாக இருக்காது என்பதனை அறிந்தே,   Digital விளம்பரங்களை இணைத்துள்ளோம். இந்த விளம்பரங்கள் தங்களின் ரசனைக்கு இடையூறாக அமையாத வண்ணம் தற்போது மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளோம். பல்வேறு செயலிகள் கட்டண சேவையினை வழங்கி வருகின்ற போதும் அவர்கள் அனைவரிடமும் இல்லாத அதிகளவான பாடல்களை நம் சேவையின் ஊடாக இலவசமாக வழங்குகின்றோம். உங்களின் தொடர்ச்சியான ஆதரவு நமக்கு கிடைத்தால் மட்டுமே தொடர்ந்தும் இந்தச் சேவையினை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். தொடர்ந்தும் ஆதரவு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.

Repeated Songs ஏன் வருகிறது, நம் வானொலிகள் அனைத்தும் Shuffle செய்யப்பட்டே பாடல்களை ஒலிபரப்புகின்றன. ஆனாலும் சில பாடல்கள் திரும்ப திரும்ப வந்து சலிப்படைய வைக்கிறது என நீங்கள் வருந்துவது புரிகின்றது, உதாரணமாக இசைஞானி வானொலியை 15 நிமிடம் கேட்ட பின், ஜானகி வானொலியையோ / SPB வானொலியை மாற்றினாலோ , இசைஞானி வானொலியில் கேட்ட பாடல்கள் மீண்டும் இந்த வானொலிகளில் ஒலிக்கும். தவிர புதிய இளைய இசையமைப்பாளர்கள் அனிருத், யுவன், மற்றும் SA ராஜ்குமார், வித்யாசாகர் போன்ற இசையமைப்பாளர்களால் இசையமைக்கப்பட்ட பாடல்கள், மற்றும்  குறைந்தளவே, இவையும் Repeated Songs ஒலிக்க காரணமாக அமைகின்றது.

 

*Data Saving Plans: southradios குழுமத்தினருக்குச் சொந்தமான அனைத்து வானொலிகளையும் குறைந்த இணைய வேகத்தில் (2G ,3G, 4G Speed) ஒலித் தெளிவுடன் உங்களை வந்து சேர வேண்டும் என்பதற்காக 64kbps Streaming bit rate இல் நாம் வழங்குகின்றோம்,
நாள் முழுவதும் – 24 மணி நேரம் நாம் வானொலிகளை கேட்டாலும் நாளொன்றுக்கு உங்களிற்கு 700MB Data மட்டுமே செலவாகும்.
64 kbps = 28.8 MB per hour
28.8MBx24 hours = 691.20MB
மாதமொன்றிற்கு, நீங்கள் 24 மணி நேரமும் நம் சேவையினை கேட்டால்,
20-21GB Data மட்டுமே செலவாகும்.

*பாடல்களின் ஒலித் தெளிவு : Song Quality: தமிழ்த் திரை இசைப் பாடல்கள் அனைத்தையும் Quality Audioவாக பெற்றுக் கொள்வது சிரமமான விடயம். நம்மிடம் உள்ள பாடல்கள் அனைத்தையும் நமது ஒலிபரப்பு மூலமாக துல்லியமான ஒலித் தெளிவில் உங்களுக்கு வழங்குகின்றோம். வழங்க முயற்சிக்கின்றோம்.