Monthly Subscription Service

மதிப்பிற்குரிய நம் நேயர்களிற்கு வணக்கம்,
நம் சேவை இச் செயலியில் உள்ள டிஜிட்டல் விளம்பரங்களை மாத்திரம் நம்பியே இடம் பெற்று வருகின்றது,
நம் ஊழியர்களிற்குரிய ஊதியம், மின்சார , இணையச் செலவு, கலையக வாடகை, காப்புரிமை கட்டணம்,  இணையத் தள செலவு, செயலி மேம்பாட்டுச் செலவு, Podcast ஒலிப்பதிவு செய்து தரும் பணியாளர்களிற்குரிய உதவி தொகை என ஏகபட்ட செலவுகளை நீங்கள் வழங்கி வரும் பேராதரவுடன் இது வரை நாட்களும் மிகுந்த இடையூறுகளுடன்,  தொடர்ந்து வந்துள்ளோம்.

நம் பணியாளர்களை அறிந்திட, இங்கே சொடுக்கவும். 

இவ் விளம்பரங்களை பயனர்கள் க்ளிக் செய்தால், அதன் ஊடாக கிடைக்கும் சிறிய தொகையின் உதவியின் அடிப்படையிலே இது சாத்தியமானது.  இவ்வளவு நாட்களாக ரொம்ப கடினமான சூழ் நிலையிலும் இச் சேவையினை இலவசமாக வழங்கிட தாங்கள் வழங்கிய நல்லாதரவிற்கு நன்றிகள் கோடி.
நாளாந்தம் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் நம் Android and IOS செயலிகளை பயன்படுத்துகின்ற போதும், 1200 -1500 பயனர்கள் மட்டுமே இவ்வாறு டிஜிட்டல் விளம்பரங்கள் ஊடாக உதவுகிறார்கள், நம்மில் அனேகம் பேர் விளம்பரங்கள் இன்றி இச் சேவையினை கேட்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம், கரெக்டா?
விளம்பரங்களை நீக்க வேண்டும் என்ற பலரின் வேண்டுகோளிற்கு அமைவாக வருகின்ற நாட்களில் Southradios நிறுவனத்திற்குச் சொந்தமான அனைத்து வானொலிகளும்,( 3D, 8D & HD வானொலிகள் உட்பட ) புதிய செயலிக்கு Spotify – Gana போன்ற செயலிகளைப் போல் – கட்டண சேவைக்கு மாற்றப்பட உள்ளது என்பதனை வருத்தத்துடன் அறியத் தருகின்றோம்.  இப் புதிய செயலியில் விளம்பரங்கள் ஏதுமின்றி, “மாதாந்த கட்டண சேவை” ஊடாக நாம் அனைவரும் பாடல் கேட்டு மகிழலாம் என்பதனை அறியத் தருகின்றோம்,
தற்போது நாம் அனைவரும் பயன்படுத்தி வருகின்ற இச் செயலியில் Southradios Tab பகுதியில் உள்ள வானொலிகள் மாத்திரம் நீக்கப்பட உள்ளது, ஏனைய Top Radios, Devotional, World FM, Tamil Radios பகுதியில் உள்ள உலகளாவிய பண்பலைகள் , Southradios நிறுவனத்திற்குச் சொந்தமில்லாத வானொலிகள் அனைத்தும், நீக்கப்பட மாட்டது.
நம்மில் பலர், விமர்சனங்கள் பகிர்கின்ற போது, செயலி தொடர்பான வழுக்கள் பயனர்களின் விமர்சனங்களின் அடிப்படையில் நிவர்த்தி செய்யப்பட்டாலும், மீண்டும் வந்து அது தொடர்பாக புதிய விமர்சனங்களைப் பகிர்வதேயில்லை , தயவு செய்து, குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டால், திருத்தி எழுதி உதவுங்கள், புதிய பயனர்களை பெற்றுக் கொள்ள இது போன்ற பகிர்வுகள் மாத்திரமே மிகப் பெரும் உதவியாக அமையும்.
தொடர்ச்சியாக வருகின்ற நாட்களில் தங்கள் அனைவரினதும் நல்லாதரவு கிடைத்தால், நம் சேவைக்கு அதிக பயனர்களின் பேராதரவு 5**** மதிப்பெண்களுடன் கிடைத்தால் , விளம்பரங்களின் உதவி அதிகரித்தால் மாத்திரமே,
இச் சேவையை இலவசமாகவே தொடர்வது தொடர்பில் மீள் பரிசீலனை செய்யக் காத்திருக்கின்றோம்.
புரிந்துணர்வுடன் தொடரும் தங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பிற்கும் நன்றி.