IOS FAQ

New Version Available – 2.6.0 Please update your app – App Crash , App Hang and Bugs Fixed (If you are interested Only) , Click on your app Left side menu – Go to App info – Version – you can find out your current app Version,
How to use your southradios app? What we know about our Southradios App? Click Here to Watch the video

Southradios Mobile Application தொடர்பான புதிய தொழில்நுட்பங்களை அறிந்திட இந்த வீடியோவை பாருங்கள், வீடியோ பார்க்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Dear Honorable Listeners,
Thank you so much for your continues support.

Southradios – You’re All in one online Radio Entertainment portal,

Kindly Spare one minute with us to read this for mutual understanding!

3 Things to Share > NO more Push Notification > Rewrite Reviews> Technical Support. That’s all your honor.

We value your time, support & Privacy. at the same time, we believe you all also have a clear understanding of our product & services.

Good News for you. Now onwards – No more Push notifications, Great Escape from our pushing notifications 🙂

All our new updates information, Southradios product-related messages will be available through “Alert Message ” Part, simply click on your app left side menu – Under Alert message / App info – Release notes.

You can find all the latest update information, technical related answers,

In our business your reviews only boost up our business, it will encourage us a lot to move forward with the hope.

We need your help to rewrite your comments with 5 Star rating , if you are done already. Please don’t ignore, Share it to your friends as well.

Any App / Web related questions – Technical issues – feel free to reach us by contacting info@southradios.com. We are working 24×7 for you without putting working hours.

If you have any questions please feel free to reach us at any time.

Thank you

Click Here To Download 200+ Tamil Radios App
Any Concerns and Feedback please email to – info@southradios.com

Currently We are experiencing Google Casting delay issue on IOS Devices – will get it fix with in a week or 2, we apologize for the inconvenience.

பேரன்பிற்கும், நம் பெரு மதிப்பிற்குமுரிய அன்பு நேயர்களிற்கு வணக்கம்,
நமது புதிய பதிப்பு 4.0.30 தற்போது வெளியாகியுள்ளது, App Crash, Hang முதலிய வழுக்கள் நிவர்த்தி செய்யப்பட்ட பதிப்பு, விரும்பியவர்கள் Update செய்து கொள்ளுங்கள். தங்கள் செயலியின் பதிப்பு தொடர்பான விபரங்களை அறிந்திட இடது பக்க Menu இல் சொடுக்கி, App info பகுதியின் கீழ் வரும் Version ஊடாக அறிந்து கொள்ளலாம்.
நமக்காக ஒரு நிமிடம் ஒதுக்கி இதனைப் படிக்க இயலுமா அன்பு நேயர்களே?

இந்த அவசர மடல் ஊடாக 4 விடயங்களை தங்களுடன் பகிர விரும்புகின்றோம்,

1) இன்று முதல் தங்கள் நம் செயலி தொடர்பான எந்த ஓர் அறிவித்தல்களும் Push Notification ஊடாக உங்களை வந்தடையாது என்பதை அறியத் தருகின்றோம். காரணம் நம் பயனர்கள் அனைவரும் இசையை ரசிப்பதற்காகவும், தம் மேலதிக நேரத்தை செலவிட்டு பொழுது போக்கிடும் நோக்கில் நம் சேவையை கேட்பதாலும், தங்கள் அனைவருக்கும் நிகழும் அசௌகரியங்களைத் தவிர்க்கும் நோக்கில் இதனை முற்று முழுதாக நீக்குகின்றோம்.

2) புதிய மாற்றங்கள் – புதிய தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் நம் செயலியை திறக்கும் பயனர்களிற்கு மாத்திரம் செயலியின் உள் பெட்டி ஊடாக வந்து சேரும் என்பதனையும் அறியத் தருகின்றோம்.
3) நம் இச் சேவையானது ஓர் இலத்திரனியல் வாணிப சேவை பிரிவின் கீழ் வருகின்ற சேவையாகும், அடுத்து வரும் 4-6 மாதங்களிற்கு பொருளாதார நிலமைகள், நம் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட வாழ்க்கை முறை யாவும் இந்த இடர் கால சூழ் நிலையால் எப்படி அமையப் போகின்றது என்பது நமக்கு தெரியாது, நம்மால் எதிர்வு கூறிடவும் முடியாது, இந்த சூழலில் நாம் அனைவரும் வழமைக்கு திரும்ப – பொருளாதார ரீதியில் அதள பாதாளத்திற்கு சென்றுள்ள நம் வாழ்வு மீண்டும் செழிக்க பல மாதங்கள் – ஏன் ஒரு வருடத்திற்கும் மேல் ஆகலாம்.

இவ் வேளையில், இலத்திரனியல் வாணிபத் துறையில் உள்ள Southradios சேவையானது தங்களிடம் ஓர் வேண்டுதலை முன் வைக்கிறது, தங்களின் தனிப்பட்ட தரவுகள், தங்களின் பொன்னான நேரம், அதே போன்று தாங்கள் முன் வைக்கும் விமர்சனங்கள், எதிர் மறை கருத்துக்கள் அனைத்திற்கும் நாம் மதிப்பளிக்கின்றோம், தாங்கள் அனைவரும் இங்கே பகிரும் செயலி தொடர்பான பிரச்சனைகள், இடையூறுகள், மற்றும் Negative Reviews என இவை அனைத்திற்கும் அதிக பட்ச முன்னுரிமை வழங்கி உடனுக்குடன் குறுகிய நேரத்தினுள் பதில் வழங்குகின்றோம், ஆனால் பயனர்கள் எவருமே தங்கள் பிரச்சனைகள் – வேண்டுகோள்கள் தீர்க்கப்பட்டதும் மீண்டும் வந்து நமக்கு அறியத் தருவதில்லை, ஒரு சிலர் மட்டும் மீண்டும் அறியத் தந்து ஏற்கனவே வழங்கிய தமது விமர்சனங்களை நீக்கி புதிய கருத்துக்களை Review பகுதியில் பகிர்கிறார்கள்,

இங்கே தாங்கள் சுட்டிக் காட்டிய குறைகள், இடையூறுகள் அனைத்தும் நம் ஊழியர்களால் நிவர்த்தி செய்யப்பட்ட பின்னரும் ஒரு சில பயனர்கள் அது தொடர்பில் திருத்திய கருத்துக்களை (Re writing Negative Reviews) பகிராத சந்தர்ப்பத்தில் புதிய பயனர்களை நாம் பெற்றுக் கொள்வது சிரமாக இருக்கிறது, நம் செயலியை பயன்படுத்த நினைக்கும் ஒவ்வொருவரும் இந்த குறைகள் – வழுக்கள் இன்னமும் உள்ளதா? என்கின்ற ஐயமே வந்து கொள்கின்றது, தயவு கூர்ந்து தங்கள் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டால் ஊக்கப்படுத்துங்கள், புதிய கருத்துக்களை பகிருங்கள், இதுவே தொடர்ந்தும் இச் சேவையினை நாம் அதிக பயனர்களின் பங்களிப்புடன் முன்னகர்த்திச் சென்றிட ஊக்க மருந்தாக அமையும்.

4)தயவு கூர்ந்து செயலி மற்றும் சேவை தொடர்பான தொழில்நுட்ப கேள்விகளை Review பகுதியில் பகிராதீர்கள், இது நம் அனைவருக்கும் நேர விரயத்தை தவிர்த்திட உதவியாக அமையும். இதற்கான காரணம் தற்போது நாம் குறைந்த மனித வளத்துடன் இச் சூழலால் இயங்குவதேயாகும். (Limited Staff- Employees) தற்போதைய இந்த இடர் காலத்தில் இவ்வாறான சந்தேகங்களை நமது மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள் info@southradios.com , விரைவாக பதில் வழங்க நம் ஊழியர்கள் காத்திருக்கிறார்கள்.

புரிந்துணர்வுடன் தொடரும் தங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பிற்கும், நல் ஆதரவிற்கும் நன்றி, நீங்களில்லாமல் இங்கே நாங்கள் இல்லை!!
மேலதிக தகவல்களை பெற்றிட, தொடர்பு கொள்ள info@southradios.com

Currently We are experiencing Google Casting delay issue on IOS Devices – will get it fix with in a week or 2, we apologize for the inconvenience.