Important Info – அறிவித்தல்

மதிப்பிற்குரிய நம் நேயர்களிற்கு வணக்கம்,
நம் நேயர்களில் ஒரு சிலர் பகிரும் தவறான விமர்சனங்கள் மிகுந்த மன வருத்தமளிக்கிறது.
Southradios – இது தமிழர்களிற்குச் சொந்தமான தளம், இங்கே தமிழகம், இலங்கை , சிங்கப்பூர், மலேசிய வாழ் தமிழர்கள் பணி புரிகிறார்கள்.
இங்கு நாம் எந்த ஓர் அரசியல் கட்சியினையோ, தனிப்பட்ட சமூகத்தினையோ, ஆதரிப்பது கிடையாது. இங்கு வருகின்ற ஹிந்தி விளம்பரங்கள் தொடர்பில் நம் நேயர்கள் தவறான புரிதலுடன் உள் பெட்டியிலும், விமர்சனப் பகுதியிலும் அவதூறான விமர்சனங்களை நம் ஊழியர்களை நோக்கிப் பகிர்வது வருத்தமளிக்கிறது.
Exclusive southradios பகுதியின் கீழ் வருகின்ற நம் நிலைய இலட்சினை உடைய வானொலிகள் மட்டுமே நமக்குச் சொந்தமானவை.
தனியாருக்கு சொந்தமான , மற்றும் அரச ஒலிபரப்புச் சேவைகளுக்குச் சொந்தமான வானொலிகள் உட்பட  500 இற்கும் மேற்பட்ட வானொலிகள் இச் செயலியில் உள்ளது.
இவை devotional, Tamil Radios, World FM, Top Radios , Air Tamil பகுதியில் இணைக்கப்பட்டுள்ளன.
நமக்குச் சொந்தமல்லாத, மேற் குறிப்பிட்ட தனிநபர் மற்றும் அரச வானொலிகளில் ஒலிபரப்பாகும் விளம்பரங்களிற்கும், அவை ஒலிபரப்படும் மொழிக்கும் நம் நிறுவனத்திற்கும் எந்த ஓர் தொடர்பும் கிடையாது. 
அது போன்று நம் செயலியை நீங்கள் வட இந்தியா அல்லது தமிழகம் தவிர்ந்த பிற மாநிலங்களில் பயன்படுத்துபவராயின்  ஹிந்தியில் வரும் display விளம்பரங்களை பார்க்க நேரிடலாம். இவ் விளம்பரங்கள் கூகிள் நிறுவனத்தினரால் தானியங்கி முறையில் தங்களின் location அடிப்படையில் அனுப்பப்படுபவை.
இவை நம்மால் பகிரப்படுபவை அல்ல.
இச் சேவையினை இலவசமாக தொடர முடியாத நிலையில்,
நம் Southradios tab இன் கீழ் வருகின்ற வானொலிகளில் இனிவரும் நாட்களின் வானொலிகளை play செய்வதற்கு முன்பாக – வானொலிகளை change பண்ணுகின்ற போதும் 30 செக்கனிற்கு குறைவாகவும்,
 குறிப்பிட்ட ஓர் வானொலியில் 4 பாடல்கள் ஒலிபரப்பாகிய பின் 60 செக்கனிற்கு குறைவாகவும் ஆடியோ விளம்பரங்களை நீங்கள் கேட்க முடியும்.
இவ் விளம்பரங்கள் தாங்கள் வசிக்கும் நாட்டின் official language இல் ஒலிக்கும் என்பதை அறியத் தருகின்றோம்.
உதாரணம் France இல் வசிப்பவராயின் French மொழி விளம்பரத்தை கேட்க முடியும், அதே வேளை தமிழகத்தில் வசிப்பவராயின் ஆங்கிலம் அல்லது தமிழில் விளம்பரங்களை கேட்க முடியும்.

மேலதிக சந்தேகம் இருப்பின் info@southradios.com எனும் நம் மின்னஞ்சல் ஊடாகத் தொடர்பு கொள்ளுங்கள்.

தயவு செய்து செயலியின் Home Page பகுதியில் Announcement பகுதியின் கீழ் உள்ள Privacy Policy பகுதியினை பார்வையிடுங்கள்.

புரிந்துணர்வுடன் தொடரும் தங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பிற்கும் நன்றி

பணிவன்புடன்
நிர்வாகத்தினர்